16th February 2025 22:04:33 Hours
இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் இராணுவ வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை பொறியியல் படையணி 2025 பெப்ரவரி 14ஆம் திகதி பிரியாவிடை அளித்தது.
இலங்கை பொறியியல் படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர், அவர் வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவு தூபியில் அவர்களின் தியாகத்திற்கு மரியாதை வழங்கும் விதமாக மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார், இந்த புனிதமான தருணத்தைத் தொடர்ந்து, படையணியின் நன்றியுணர்வு மற்றும் போற்றுதலைக் குறிக்கும் வகையில், படையணி அணிவகுப்பு மைதானத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் நினைவாக நடாத்தப்பட்ட பிரியாவிடை மாலை நேரத்தில் நடைபெற்ற இரவு உணவோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பொறியியல் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் கலந்து கொண்டனர்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரியாவிடை உரை நிகழ்த்தினார். இதன் போது, அவர் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்புமிக்க சேவையையும், படையணி மற்றும் தேசத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
மேஜர் ஜெனரல் பிரதீப் கமகே அவர்கள், தனது சேவைக்காலத்தில் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தோழமைக்காக, படையணியின் படைத் தளபதிக்கும், அனைத்து நிலையினருக்கும் மற்றும் பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.