15th February 2025 12:48:02 Hours
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிராஞ் அவர்கள் 2025 பெப்ரவரி 14ம் திகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
திரு. பிராஞ் மற்றும் அவரது தூதுக்குழுவை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிவில் உறவுத் திட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தைப் பாதிக்கும் ஏனைய முக்கிய விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு குறித்த விளக்கத்தை வழங்கினார். இந்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்தக் குழுவில், அமைதி மற்றும் மேம்பாட்டு ஆலோசகர் திரு. பட்ரிக் மெக்கார்த்தி, நாட்டுப் பொருளாதார நிபுணர் கலாநிதி வாகிஷா குணசேகர மற்றும் வடக்கிற்கான கள ஒருங்கிணைப்பு அதிகாரி திருமதி காயத்திரி குமரன் ஆகியோர் அடங்குவர். நாட்டில் சமூக-பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்களை நிவர்த்தி செய்வதில் சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளை அவர்களின் விஜயம் எடுத்துக்காட்டுகிறது.
நினைவுப் பரிசுகள் பரிமாற்றத்துடன் விஜயம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து திரு. பிராஞ் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டார்.