Header

Sri Lanka Army

Defender of the Nation

15th February 2025 15:25:16 Hours

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8 வது வருடாந்த கல்வி அமர்வு

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி அமர்வு, "இராணுவ சுகாதாரப் பராமரிப்பு சிறப்பு கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தாக்கத்தை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளின் கீழ், 2025 பெப்ரவரி 14ஆம் திகதி கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு இராணுவ-சிவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இராணுவ மருத்துவத்தில் நிபுணர்களிடையே அதிக தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் அழைப்பின் பேரில் எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் நரேந்திர பிந்து கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, கடற்படைத் தளபதி மற்றும் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்தியக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரிகேடியர் ததாகதா சட்டர்ஜி, வைத்தியர் ஜோத்ஸ்னா பஞ்ச் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் வைத்தியர் ரவீந்தர் குமார் பாண்டே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தளபதியும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான பிரிகேடியர் டபிள்யூ.ஜீ.ஆர்.பீ பீரிஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மூன்று நாள் அமர்வுகளின் முக்கிய நோக்கங்களை கோடிட்டுக் காட்டி, 2016 இல் கல்லூரி நிறுவப்பட்டது குறித்தும் விளக்கினார். இதைத் தொடர்ந்து கௌரவ விருந்தினரின் உரை இராணுவ மருத்துவத்தில் முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சாதனைகளுக்கு பிரதம விருந்தினர் தனது வாழ்த்துக்களையும், நிகழ்வின் முக்கியத்துவம் குறித்த தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

பல்வேறு மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவனங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முழுவதும் பலதரப்பட்ட நிபுணத்துவத் துறைகளில் உற்பத்தி ரீதியான கலந்துரையாடல் மற்றும் வலுப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புகளை ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்பாக இருந்தது.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி, இலங்கை இராணுவ கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை அமைப்பாகும்.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வு, அறிவை மேம்படுத்துதல், புதுமைகளை வளர்ப்பது மற்றும் இராணுவ சுகாதாரப் பராமரிப்புக்கான உலகளாவிய பங்களிப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மன்றமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

(புகைப்படம்: பாதுகாப்பு அமைச்சு)