14th February 2025 15:10:14 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 14 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு துணிச்சலான அதிகாரியாக தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பணிகளில் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை வழங்கியதற்காக சிரேஸ்ட அதிகாரியை இராணுவத் தளபதி பாராட்டினார். அவரது பதவிக்காலத்தில் அவரது குடும்பத்தினர் வழங்கிய முக்கிய ஆதரவையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் இராணுவத் தளபதியின் உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இராணுவத் தளபதி சிறப்பு நினைவு சின்னத்தையும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1990 செப்டம்பர் 07ம் திகதி பாடநெறி இல 2 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1991 மார்ச் 13ம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகனப் படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட அவர் 2023 ஒக்டோபர் 10ம் திகதி அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார். சிரேஸ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 19 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகப் பதவி வகிக்கின்றார்.
தனது பணிக்காலம் முழுவதும், 3 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியில் அணி தலைவர்,கவச வாகனப் பயிற்சி நிலையத்தின் குழு கட்டளையாளர்,1 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியில் படைத் தலைவர், 1 வது இலங்கை கவச வாகனப் படையணி சீ குழுவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியில் பிரதி நிறைவேற்று அதிகாரி, 6 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் நிறைவேற்று அதிகாரி, 6 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் தொழிநுட்ப நிறைவேற்று அதிகாரி, 6 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் ஏ குழுவின் அதிகாரி கட்டளையாளர், இலங்கை கவச வாகனப் படையணி நிலையத்தின் வர்த்தகப் பயிற்சி குழுவின் அதிகாரி கட்டளையாளர், 5 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் பி குழுவின் அதிகாரி கட்டளையாளர், 5 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் குழு தலைமையகத்தின் அதிகாரி கட்டளையாளர் மற்றும் இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
பின்னர் அவர், 8 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 57 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 9 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை கவச வாகனப் புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக சிரேஷ்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், கவச வாகன பிரிகேட் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1, தேசிய துப்பாக்கி சங்க அலுவலகம் பணிநிலை அதிகாரி 1 மற்றும் கவச வாகன பயிற்சி நிலையத்தின் தளபதி, இராணுவ ஊடக பணிப்பகத்தின் கேணல் ஊடகம், 221 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி, கவச வாகன பிரிகேட் தளபதி, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி ஆகிய பதவிகளை வகிதுள்ளதுடன் தற்போது 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
தனது இராணுவ வாழ்க்கையில், அடிப்படை குறிபார்த்து சுடல் பயிற்சி பாடநெறி, பரசூட் சிறப்பு பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, அடிப்படை பரசூட் பாடநெறி, தேசிய நடைமுறை துப்பாக்கி சூட்டு கூட்டமைப்பு அடிப்படை பாதுகாப்பு பாடநெறி, அதிகாரி பயிலிளவல் பயிற்சி பாடநெறி பாகிஸ்தான், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி பங்களாதேஷ், இளங்கலை அதிகாரி (கவச) பாடநெறி பாகிஸ்தான், பிடிஆர் 80 மற்றும் 80 ஏ பயிற்சி பாடநெறி ரஷ்யா, தன்னியக்க துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் அதிகாரி பாடநெறி இந்தியா, கனிஷ்ட பணிநிலை பாடநெறி, மத்திய தொழிலாண்மை பாடநெறி பாகிஸ்தான், போர் குழு கட்டளையார் பாடநெறி இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளின் படைத் தளபதி பாடநெறி பங்களாதேஷ் உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச படநெறிகளை அவர் கற்றுள்ளார்.