Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2025 13:26:49 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேக்கா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 13 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு துணிச்சலான அதிகாரியாக தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பணிகளில் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை வழங்கியதற்காக சிரேஸ்ட அதிகாரியை இராணுவத் தளபதி பாராட்டினார். அவரது பதவிக்காலத்தில் அவரது குடும்பத்தினர் வழங்கிய முக்கிய ஆதரவையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேக்கா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இராணுவத் தளபதி சிறப்பு நினைவு சின்னத்தையும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் ஜிஎஸ் பொன்சேக்கா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில், 1991 ஜனவரி 2 ம் திகதி, பாடநெறி 35 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1992 ஓகஸ்ட் 29 அன்று இலங்கை சமிக்ஞை படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட அவர் 2024 செப்டம்பர் 30 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார். சிரேஸ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 18 அன்று தனது 55 வது வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். சிரேஷ்ட அதிகாரி ஓய்வு பெறும் போது, தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளராக பதவி வகிக்கின்றார்.

தனது பணிக்காலம் முழுவதும், 4வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் (சிலாவத்துர) உள்ளக பாதுகாப்பு படைப்பிரிவின் படைப்பிரிவுத் தளபதி, 4வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படை கட்டளையாளர், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் காலாட் படை படையலகு பயிற்சி குழுவின் பயிற்றுவிப்பாளர், போர் பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், கவச வாகன படையணியின் சமிக்ஞை அதிகாரி, 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் பதில் நிறைவேற்று அதிகாரி, 53 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவின் (மின்னணுப் போர்) கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிறைவேற்று அதிகாரி மற்றும் அப்போதைய சமிக்ஞை படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.டபிள்யூ.பீ செனவிரத்ன (ஓய்வு) அவர்களின் முகாம் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.

மேலும், அவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரி பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவின் நிறைவேற்று அதிகாரியாகவும், இலங்கை சமிக்ஞைப் படையின் 6 வது வலுவூட்டல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள் மற்றும் பயிற்சி), செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 11 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இராணுவச் செயலாளர் அலுவளக பணிநிலை அதிகாரி 1 (தொழில் திட்டமிடல் பிரிவு), 7 வது வலுவூட்டல் இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியாகவும், 21 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), மாலி ஐ.நா அமைதி காக்கும் பணிப் படையின் பணிநிலை அதிகாரியாகவும், 653 வது காலாட் பிரிகேட் தளபதியாகவும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிலைய தளபதியாகவும் கடமை ஆற்றியுள்ளதோடு தற்போது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.

அவரது சிறப்புமிக்க மற்றும் விசுவாசமான சேவைக்காக பதவிக்காலத்தில் அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

தனது இராணுவ வாழ்க்கையில், உயர் காலாட் படை பயிற்சி பயிற்றுனர்கள் பாடநெறி, மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் புவியியல் தகவல் அமைப்பு அடிப்படை பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, ஓரியண்ட் கல்வியற் நிறுவனம் நடத்தும் கணினி பாடநெறி, இந்தியாவில் இளம் அதிகாரிகள் (சமிக்ஞை) பாடநெறி மற்றும் இந்தோனேசியா ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி உள்ளிட்ட ஏராளமான உள் நாட்டு மற்றும் சர்வதேச பயிற்சிகளை அவர் கற்றுள்ளார்.

மேலும் சிரேஷ்ட அதிகாரி உயர் கல்வியைப் பயின்று, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமாவைப் பெற்றுள்ளார்.