11th February 2025 21:24:25 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 11 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு துணிச்சலான அதிகாரியாக தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பணிகளில் அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையை வழங்கியதற்காக சிரேஸ்ட அதிகாரியை இராணுவத் தளபதி பாராட்டினார். அவரது பதவிக்காலத்தில் அவரது குடும்பத்தினர் வழங்கிய முக்கிய ஆதரவையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ இராணுவத் தளபதியின் உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக இராணுவத் தளபதி சிறப்பு நினைவு சின்னத்தையும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் 1991 ஜனவரி 2 அன்று பாடநெறி இல 35 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். தியதலாவ, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அவர் இரண்டாம் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டு 1992 ஓகஸ்ட் 29, அன்று இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட 2024 செப்டம்பர் 30, அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றார். சிரேஸ்ட அதிகாரி 2025 பெப்ரவரி 15 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். ஓய்வு பெறுகையில் பொறியியல் படைப்பிரிவு தளபதியாகவும் இலங்கை இராணுவ ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவின் தலைவராவும் பதவி வகிக்கின்றார்.
தனது பணிக்காலம் முழுவதும், 6 வது களப் பொறியியல் படையணியின் 62, 63 மற்றும் 64 வது படைக் கட்டளையாளர், 8 வது களப் பொறியியல் படையணியின் புலனாய்வு அதிகாரி, அப்போதைய படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஈஎச் சமரதுங்க (ஓய்வு) அவர்களின் உதவியாளர், 8 வது களப் பொறியியல் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 8 வது களப் பொறியியல் படையணியின் 82 வது படைக் கட்டளையாளர், 8 வது களப் பொறியியல் படையணியின் 82/83 படையின் கட்டளையாளர், இலங்கை பொறியியல் படையணி பாடசாலையின் (பயிற்சி பிரிவு) அதிகாரி கட்டளை, 1 வது களப் பொறியியல் படையணி மற்றும் 11 வது களப் பொறியியல் படையணியின் அதிகாரி கட்டளை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி), 8 வது களப் பொறியியல் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது களப் பொறியியல் படையணி தலைமையகத்தின் அதிகாரி குழு கட்டளையாளர், 6 வது களப் பொறியியல் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா சபையின் அமைதி காக்கும் இலங்கை படையலகின் கட்டளை அதிகாரி, 3 வது அதிரடிப் படை தலைமையகத்தின் பதில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர், 1 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இராணுவத் தலைமையக படையலகின் கட்டளை அதிகாரி, 231 வது காலாட் பிரிகேட் தளபதி, 141 வது காலாட் பிரிகேட் தளபதி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் (பொதுப் பணிநிலை), இராணுவ தலைமையகத்தின் காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், பொறியியல் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி, 12 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி மற்றும் பொறியியல் காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
எதிரியை எதிர்கொண்ட அவரது துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில், சிரேஸ்ட அதிகாரிக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவரது விதிவிலக்கான, சிறப்புமிக்க மற்றும் விசுவாசமான சேவைக்காக, உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
தனது இராணுவ வாழ்க்கையில், படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டப் பாடநெறி, படையலகு கணக்கியல் அதிகாரிகள் பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பாடநெறி, அடிப்படை பாராசூட் பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பயிற்சி பாடநெறி, கண்ணிவெடி செயல் முகாமை பாடநெறி, கூட்டு/ஒருங்கிணைந்த பரிமாற்றப் பயிற்சி (JCET) சமநிலை பாடநெறி, கண்ணிவெடி செயற்திட்டப் பாடநெறிக்கான தொழில்நுட்ப தயாரிப்பு, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் உயர் புதுப்பிப்பு பாடநெறி, ஆயுத மோதல் சட்டம் உயர் புதுப்பிப்பு பாடநெறி, வெடிபொருள் அகற்றும் நிலை I மற்றும் II பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி நடவடிக்கை IMAS EOD நிலை III பாடநெறி, இரசாயணவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) எதிர்ப்பு (நிலை II) பாடநெறி, பாகிஸ்தான் இளம் அதிகாரி பொறியியல் பாடநெறி, ஒருங்கிணைந்த அதிகாரிகள் குண்டு அகற்றும் பாடநெறி - இந்தியா, ஹைட்டி ஐக்கிய நாடுகளின் இராணுவ தூண்டல் பயிற்சி பாடநெறி மற்றும் சிங்கப்பூரில் நகர்ப்புற நிலப் போக்குவரத்து முகாமை பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பயிற்சிப் பாடநெறிகளை அவர் முடித்துள்ளார்.