Header

Sri Lanka Army

Defender of the Nation

09th February 2025 18:54:26 Hours

லைசியம் சர்வதேச பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 11வது காலாட் படைப்பிரிவு தளபதி பங்கேற்பு

நுவரெலியா லைசியம் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025 பெப்ரவரி 07 ம் திகதி நகர சபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 11வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐ.ஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குழுப்பணி, விளையாட்டுத்திறன் மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வுடன் விளையாட்டுப் போட்டியில் பல இல்லங்கள் ஊடாக மாணவர்கள் தடகளத் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் பல்வேறு தடகள நிகழ்வுகள் இடம்பெற்றன, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.