Header

Sri Lanka Army

Defender of the Nation

10th February 2025 16:25:19 Hours

தேசிய உள்ளக படகுப்போட்டி 2025 இல் இராணுவ படகுப் போட்டியாளர்களுக்கு வெற்றி

தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 01 வரை நடைபெற்ற தேசிய உள்ளக படகுப்போட்டி 2025 இல் இலங்கை இராணுவ படகு அணி வெற்றி பெற்றது. முப்படைகள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகளின் பங்கேற்புடன் இந்தப் போட்டி நடைபெற்றது.

சிறந்த திறமை மற்றும் உறுதியையும் வெளிப்படுத்திய இராணுவ படகு வீரர்கள், பல்வேறு பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாக 19 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பெற்றுக் கொண்ட சாதனைகள்:

ஆண்கள் திறந்த பிரிவு – 1ஆம் மற்றும் 2ஆம் இடங்கள்

பெண்கள் திறந்த பிரிவு – 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்கள்

500 x 4 ஆண்கள் பிரிவு – 2ஆம் மற்றும் 3ஆம் இடங்கள்

500 x 4 பெண்கள் பிரிவு – 1ஆம் இடம்

500 x 4 திறந்த பிரிவு – 1ஆம் இடம்