Header

Sri Lanka Army

Defender of the Nation

07th February 2025 15:48:45 Hours

10 வது விஜயபாகு காலாட் படையணியினரால் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மரம் நடுகை திட்டம்

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.கே.எஸ்.பீ.எம்.ஆர்.ஏ.பி. தொடம்வல பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 10வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.எச். சுதுசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04 ம் திகதி மணல்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 10வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் மரம் நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் போது, வளாகத்தைச் சுற்றி 40 தான்றி, தோடை மற்றும் மருத மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.