Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2025 12:46:32 Hours

141 வது காலாட் பிரிகேடினால் பாலின அடிப்படையில் திட்டமிடல் குறித்த விரிவுரை

141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர் டி எஸ். தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 141 வது காலாட் பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாயினருக்கு " பாலின அடிப்படையிலான திட்டமிடல்" குறித்த விரிவுரை 2025 ஜனவரி 22 அன்று விரிவுரை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் மேஜர் பி.ஜி.டீ.டி. பண்டாரா அவர்கள் இந்த விரிவுரையை நிகழ்த்தினார். பாலின அடிப்படையிலான திட்டமிடல் குறித்த மதிப்புமிக்க அறிவுகளை இந்த விரிவுரை வழங்கியது. மொத்தம் 13 அதிகாரிகள் மற்றும் 138 சிப்பாய்கள் இந்த விரிவுரை அமர்வில் பங்கேற்றனர்.