Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2025 12:45:12 Hours

8 வது இலங்கை சிங்க படையணியினால் மரக்கன்று நடும் திட்டம்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டம் மற்றும் தாய்நாட்டை அழகுபடுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்து, 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி 2025 ஜனவரி 30 ஆம் திகதி பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் 611 வது காலாட் பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையுடன் நடத்தப்பட்டது.

அதற்கமைய, யானைகள் சரணாலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலபரப்பில் 500 மரகன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் கேகாலை மாவட்ட செயலாளர், கேகாலை பிரதி பொலிஸ் மா அதிபர், ரம்புக்கனை உதவி அரசாங்க அதிபர், யானைகள் சரணாலயத்தின் பிரதி பணிப்பாளர் மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பின்னவல மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் பாடசாலை மாணவர்கள், அந்த சந்தர்ப்பத்தில் யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட்ட வெளிநாட்டினர் ஆகியோரும் இந்த முயற்சியில் பங்கேற்றனர்.