31st January 2025 18:26:36 Hours
இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 23 அன்று 11வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அன்று 11வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பி.ஆர்.எம்.டப்ளியூ.ஜீ.டப்ளியூ.ஏ.ஆர் பலகல்ல அவர்கள் வரவேற்றார்.
இவ் விஜயத்தின் போது, படைத்தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கான தனது தூர நோக்கு மற்றும் எண்ணங்கள் மற்றும் ஊக்கத்தை பகிர்ந்து கொண்டார். அவரது உரை ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இந்த நிகழ்வைப் பாராட்டும் விதமாகவும், நினைவுகூரும் விதமாகவும், கட்டளை அதிகாரி படைத்தளபதிக்கு ஒரு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார். நிகழ்வைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி தனது கருத்துக்களை விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பதிவிட்டதுடன் இது படையலகுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அவரது வருகையைக் குறிக்கிறது.
படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சீ.எஸ் திப்பொட்டுகே மற்றும் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.