31st January 2025 20:21:49 Hours
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 11 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் 2025 ஜனவரி 31 வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
அவர்கள் புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, படையினர் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மருத்துவ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் இராணுவ தளபதியை நுழைவாயிலில் பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கியதனை தொடர்ந்து வரவேற்றதுடன் பின்னர் அணிவகுப்பு மரியாதை வழங்குவதற்காக அழைத்து சென்றார்.
மேற்படி குழுவினர் முழுமையான பொறுப்புக்களை ஏற்கவுள்ளதை குறிக்கும் வகையில் தேசிய கொடி, இராணுவ கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களுக்கமைவாக இலங்கை இராணுவ வைத்திய படை குழுவிடம் தளபதி கையளித்தார். தென் சூடானுக்குச் செல்லும் 11 வது குழுவில் கட்டளை அதிகாரி கேணல் ஆர்எம்டிபி ராஜபக்க்ஷ யூஎஸ்பீ மற்றும் 2 ம் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேடிபீ டி சில்வா தலைமையில் 18 இராணுவ அதிகாரிகள், 02 கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 64 இராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர்.
படையினரிடம் உரையாற்றிய இராணுவத் தளபதி, அவர்களை வாழ்த்தியதுடன் இலங்கையின் ஐ.நா. அமைதி காக்கும் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இந்த பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தெற்கு சூடானில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 10வது சிறிமெட் குழு , புதிய குழுவிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானியும் கஜபா படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.