Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2025 07:45:46 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி பனாகொட இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு உரை

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "தூய இலங்கை" திட்டத்துடன் இணைந்து, பனாகொட இராணுவ முகாமின் 283 அதிகாரிகளுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் உரை நிகழ்த்தப்பட்டது.

தனது உரையின் போது, ஒழுங்கு மீறல்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் தலைமை பொறுப்பு மீறல் உள்ளிட்ட இராணுவத்தின் முக்கிய சவால்களை அவர் எடுத்துரைத்தார். சிறந்த உடற் தகுதி, இராணுவ சம்பிரதாய மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் ஒருங்கிணைப்புடன் ஈடுபடல் வேண்டும் என்று வலியுறுத்தினார். தனிப்பட்ட அபிலாஷைகளை விட ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சேவையினை வலியுறுத்தி, இராணுவத்தின் மதிப்புகள் மற்றும் மதிப்புமிக்க பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான புதிய அர்ப்பணிப்பை அவர் ஊக்குவித்தார்.