Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2025 14:31:53 Hours

நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான, மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் அவர்கள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 2025 ஜனவரி 29 அன்று யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வருகை தந்த அவரை யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி வரவேற்றதுடன், சமூக உறவுகள், பாதுகாப்பு மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

பின்னர் அவர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக பணி நிலை அதிகாரிகளின் கலந்துரையாடலில் பங்கேற்றதுடன், நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. மேலும் அவர் அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டு குறிப்புகளை பதிவிட்டதுடன், இச்சந்திப்பு நிறைவடைந்தது.