Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2025 19:55:51 Hours

மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழாவில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜனவரி 28 அன்று கண்டி லெக்சிகன் சர்வதேச பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான பதவியேற்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வின் போது, பிரதம விருந்தினர் அதிபருடன் இணைந்து, நியமிக்கப்பட்ட புதிய மாணவ தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.

தனது உரையில், நியமிக்கப்பட்ட புதிய மாணவ தலைவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தளபதி எடுத்துரைத்தார். பாடசாலை மரபுகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும், உயர் ஒழுக்கத் தரங்களைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

அதிபர், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.