Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2025 14:15:45 Hours

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த பாலர் பாடசாலையின் 60 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய கற்றல் பொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு 2025 ஜனவரி 26 ம் திகதி இடம் பெற்றது.

உள்நாட்டு சமூகத்தினரின் கல்வித் தேவைகளை ஆதரிக்கும் வகையில், குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் ரோஹித அபேசிங்க அவர்களால் இந்த முயற்சிக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.