28th January 2025 14:20:49 Hours
இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 2025 ஜனவரி 26 பலாலியில் உள்ள இந்திய அமைதிப் காக்கும் படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது.
யாழில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
யாழில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத் தூதுவர் திரு ஸ்ரீ சாய் முரளி எஸ். மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் லைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபீஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர், நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
யாழில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அலுவலக அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.