Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2025 15:47:58 Hours

இலங்கை இராணுவ படையினர் பாரம்பரிய இசை சிகிச்சை அமர்வை நடத்தினர்

இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 21 அன்று ரெண்டெஸ்வேவ்ஸ் மைதானத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி பௌத்த உளவியல் நிபுணரும், களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த மத ஆய்வுகள் முதுகலை நிறுவனத்தின் விரிவுரையாளருமான கலாநிதி. வசந்த பிரியதர்ஷன அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அனைத்து நிலையினருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த செயல்பாடுகள், தனிப்பட்ட மற்றும் கூட்டு இழப்புகளைச் சரி செய்ய உதவும் வகையில் நடைபெற்றதுடன், பிரதிபலிப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான வாய்ப்பையும் வழங்குகின்றன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.