19th January 2025 16:26:48 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 17 ம் திகதி 2 வது (தொ கஜபா படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு 2 வது (தொ கஜபா படையணி படையினரால் மரியாதை வழங்கப்பட்டதுடன், 2 வது (தொ கஜபா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்.ஜி.கே.எஸ். தர்மதாச ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். சம்பிரதாயங்களுக்குப் பிறகு, படையலகின் செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டுப் பணிகள் குறித்து கட்டளை அதிகாரி சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கினார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி முகாமை சுற்றிப் பார்த்து முக்கிய விடயங்களை ஆராய்ந்தார்.
படையினருடனான கலந்துரையாடலின் போது, "தூய இலங்கை" முயற்சியை ஆதரிப்பதற்கான இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை சிரேஷ்ட அதிகாரி வலியுறுத்தினார். இராணுவத்தின் இலக்குகளை அடைவதற்கு வீரர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மீள்தன்மையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
வருகையை நினைவுகூரும் வகையில், அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.