Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2025 14:30:45 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி கட்டளை படையலகுகளுக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 16 ம் திகதி 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது (தொ இலங்கை சிங்க படையணி, 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவரின் வாகன தொடரனிக்கு படையினரால் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு படையணியின் கட்டளை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். விஜயத்தின் போது, படையணிகளின் வசதிகளை ஆய்வு செய்த அவர், 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினருக்கு உரையாற்றினார். மேலும் ஒழுக்கம், உணர்ச்சி ரீதியான மீள்தன்மை மற்றும் உடல் வலிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இராணுவத் தளபதியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் "தூய இலங்கை" முயற்சியையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணிகளில் மரக்கன்று நாட்டிய அவர், விஜயத்தின் முடிவில் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது குறிப்புகளை பதிவிட்டார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.