Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2025 09:10:44 Hours

மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ். திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதையில் இராணுவ பதவி நிலை பிரதானி

32 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக சேவை செய்த இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை திங்கட்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் மஹாயாவ மயானத்தில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இரங்கல் தெரிவிக்கும் பலர் கலந்து கொண்டனர்.

இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் பூதவுடல் தாங்கிய பேழையினை பெற்று, தேசியக் கொடி போர்த்தி துப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர்.

இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் பேழையினை முறையாகப் பெற்று தகன மேடையை நோக்கிச் சென்றனர். அவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்களும் பேழையினை பின்னால் அணிவகுத்து சென்றனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் (பதில்) தளபதி அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன், அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. இது ஓர் இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.

இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) அவர்கள் ஆயுதப் படையின் நீண்டகால பாரம்பரியத்திற்கு ஏற்ப, தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;