Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2025 15:16:22 Hours

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தினால் விரிவுரை ஏற்பாடு

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தினால் 2025 ஜனவரி 08 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தில் "தொற்று மற்றும் தொற்றாத நோய்கள்" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது.

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் எஸ்.பி.ஜே.வை. உதுல பண்டார அவர்கள் விரிவுரையை நிகழ்த்தினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விரிவுரையில் பங்கேற்றனர்.