Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2025 10:50:21 Hours

21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

21 வது காலாட் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், சீரற்ற காலநிலையால் சிறிதளவு சேதமடைந்த கல்குளம் மஹானொச்சிகுளம் குள கரையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும், ஹொரவ்பொத்தானையில் உள்ள கிரி இப்பான்வெவ குள கரையை 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.டீ.பீ. சிறிவர்தன பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொண்டர்) கஜபா படையணி படையினர் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி சீர் செய்தனர்.

அதே போன்று, 5 வது (தொண்டர்) கஜபா படையணி ஹொரவ்பொத்தானை நகரப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதற்காக 300 க்கும் மேற்பட்ட மதிய உணவுப் பொதிகளை தயாரித்து ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளருக்கு வழங்கியது. இந்த முயற்சிக்கான உலர் உணவுப் பொருட்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், 2025 ஜனவரி 19 அன்று வெஹெரதென்ன பாலம் சுமார் 6 அடி நீரில் மூழ்கியுள்ளது. வெஹெரதென்ன பாலத்தின் ஊடாக கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் 5 (தொண்டர்) கஜபா படையணி படையினர் இலங்கை கடற்படைக்கு உதவினர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை, பலுகஸ்வெவ சின்னசிட்டிக்குளத்தின் அணைக்கட்டு சிறிய அளவில் சேதமடைந்து காணப்பட்டதை தொடர்ந்து 213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2 வது இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜனவரி 20 ம் திகதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய 2025 ஜனவரி 20ம் திகதி ஹொரவபொத்தானை வீதி நீரில் மூழ்கியதை தொடந்து 5 வது (தொ) கஜபா படையணி படையினர் யுனிபபல்களைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை வழங்கினர்.