20th January 2025 13:03:51 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இணைந்து 2025 ஜனவரி 19 ம் திகதி, தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கங்காராமய விகாரையின் பிரதம விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி மகா நாயக்க தேரரிடமிருந்து ஆசி பெற்றார்.
இந்த நல்லுறவு சந்திப்பின் போது, வணக்கத்திற்குரிய மகா நாயக்க தேரர், நாட்டின் ஆயுதப் படைகளை மரியாதையுடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்த இராணுவத் தளபதிக்கு வலிமை, ஞானம் மற்றும் விவேகம் கிடைக்க ஆசீர்வதித்தார்.
பின்னர் இராணுவத் தளபதி மகா நாயக்க தேரரின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கடமைகளைப் பாதுகாப்பதில் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பு நாட்டின் மத நிறுவனத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நிலவும் வலுவான கலாசாரம் மற்றும் ஆன்மீக உறவுகளை மேம்படுத்துவதாகும்.