19th January 2025 10:44:00 Hours
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது 'தூய இலங்கை' தேசிய திட்டம் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த ஏற்றதாக மாற்றவும், சிறிய பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. தேசிய நலனுக்காக பாதுகாப்புப் படையினர் ஆதரவு வழங்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவம் அணிதிரண்டுள்ளது.
2025 ஜனவரி 18 முதல் 2025 ஜனவரி 27 வரை அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களாலும் நாடு முழுவதும் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக, 2025 ஜனவரி 18 அன்று வரவிருக்கும் நெல் சேமிப்புத் தேவைக்காக வசதிகள் முன்கூட்டியே தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை இராணுவ படையினர் பல பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பதில் பங்களித்தனர்.
அதேவேளை, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் 21 வது காலாட் படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஏபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினர் 2025 ஜனவரி 20 ம் திகதி உபுல்தெனிய நெற் களஞ்சிய வளாகத்தை சுத்தம் செய்தனர்.