19th January 2025 10:45:58 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 28 வது படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 16 ஆம் திகதி பொரல்லாவில் உள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசிர்வாதங்களுக்குப் பிறகு கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவர் வருகை தந்தபோது, நிலைய தளபதி பிரிகேடியர் பீ.எம்.எஸ். கருணாரத்ன பீஎஸ்சி அவர்களால் வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றதுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், படைத்தளபதி போர் வீராங்கனையின் நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி படைத்தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக ஒரு முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு படையினருக்கு உரையாற்றினார். மேலும், நிகழ்ச்சியில் அனைத்து நிலை தேநீர் விருந்து மற்றும் பணிநிலை அதிகாரிகளின் பங்கேற்புடன் ஒரு விளக்கவுரையும் இடம்பெற்றது.
புதிய படைத்தளபதி தற்போது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமனம் பெற்றுள்ளார்.