18th January 2025 05:55:02 Hours
இலங்கை பீரங்கி படையணியின், புதிதாக நியமிக்கப்பட்ட 25வது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை கௌரவிக்கும் வகையில் 2025 ஜனவரி 17ம் திகதி பிரமாண்டமான பாராட்டு அணிவகுப்பு விழாவை நடாத்தியது. இலங்கை பீரங்கி படையணியில் இருந்து வெளிவந்த நான்காவது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆவார்.
படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை, 55 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், படையணி நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் இராணுவத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து 6வது இலங்கை பீரங்கி படையணி அணிவகுப்பு மைதானத்தில் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இராணுவத் தளபதி வளாகத்தில் மரக்கன்று நாட்டினார்.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தின் போது, இராணுவத் தளபதி படையணி படையினருடன் கலந்துரையாடியதுடன் தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் நிறைவாக நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்புகளை கையெழுத்திட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சீஎஸ் வீரசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ ஐஜீ, இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துணைவியார், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.