16th January 2025 19:54:19 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கைப் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை கொழும்பில் அவரது அலுவலகத்தில் 2025 ஜனவரி 16 ம் திகதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கலந்துரையாடலின் போது, பிரதமர் இராணுவத் தளபதியின் புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பைப் பராமரிப்பதிலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதிலும் இராணுவத்தின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தியதுடன் அதே நேரத்தில் அரசாங்கத்திற்கு இராணுவத்தின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த கலந்துரையாடலின் போது, நல்லெண்ணத்தின் அடையாளமாக, இராணுவத் தளபதி பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
(புகைப்படம் ஆதாரம்: பிரதமர் அலுவலக ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவு)