16th January 2025 09:20:15 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஎஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களுக்கு 54 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2025 ஜனவரி 12 ம் திகதி அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த வெளிசெல்லும் படைப் பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து வீரமரணம் அடைந்த போர்வீரர்கள் நினைவு தூபியில் மலர் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படைப்பிரிவின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் அவர் தனது பதவிக்காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழு படம் எடுத்துகொண்டார்.
படையினருக்கு உரையாற்றிய சிரேஷ்ட அதிகாரி, தனது கடமை காலத்தில் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நன்றி தெரிவிக்கும் விதமாக, 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அவரது சிறந்த தலைமையை அங்கீகரிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கினர். நிகழ்வு அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.