Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2025 11:05:27 Hours

24 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை மற்றும் விகாரை தூய்மையாக்கல்

"தூய இலங்கை" முயற்சியின் ஒரு பகுதியாக, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.சி.எல். கலப்பத்தி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கடற்கரை மற்றும் விகாரை சுத்தம் செய்யும் திட்டங்களை 24 வது காலாட் படைப்பிரிவு ஏற்பாடு செய்தது.

அக்கரைப்பற்று கடற்கரை பூங்காவில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெற்றதுடன் 241 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, பொதுமக்கள், அக்கரைப்பற்று நகர சபை ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடற்கரையின் ஒரு கிலோமீட்டர் பகுதியை சுத்தம் செய்வதற்கு தங்கள் உதவியை வழங்கினர்.

மேலும், அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையில் 241 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் பங்களிப்புடன் விகாரை சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.