15th January 2025 17:32:19 Hours
புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜனவரி 14 அன்று கண்டி இராணுவத் தள மருத்துவமனைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அதன் செயற்பாட்டு அம்சங்களை மதிப்பாய்வு செய்ததுடன், அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, கண்டி இராணுவத் தள மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலம்கும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி புதிய மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாட்டுப் பகுதிகளை ஆய்வு செய்து, அதன் பராமரிப்பை உறுதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்தார்.
இந்த மருத்துவமனை தற்போது பல்வேறு சேவைகளை வழங்குகிறது, அவற்றில் வெளிநோயாளர் பிரிவு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மற்றும் எலும்பு மூட்டு சேவைகள், பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சேவைகள், பல் பராமரிப்பு, நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழுமையாக பொருத்தப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் மருந்து வசதிகள் ஆகியவை அடங்கும். இந்த சேவைகள் இராணுவ வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படுகின்றன.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.