15th January 2025 15:51:08 Hours
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜனவரி 15 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பணிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காக இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு பணிக்காலம் முழுவதும் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக விசேட பாராட்டுச் சின்னமும், அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் ஆர்.பீ.ஏ.ஆர்.பீ. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் 1990 நவம்பர் 3 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி எண் 08 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூயில் தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 1992 நவம்பர் 14 ஆம் திகதி கஜபா படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார்.
இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு சீராக உயர்த்தப்பட்ட அவர் 2024 மே 03 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்த்தப்பட்டார். இந்த சிரேஷ்ட அதிகாரி 2025 ஜனவரி 18 அன்று தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் அவர் தற்போது 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகப் பதவி வகிக்கின்றார்.
1 வது கஜபா படையணியின் குழு கட்டளையாளர், 1 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, கஜபா படையணி தலைமையகத்தின் ஆட்சேர்ப்பு பயிற்சிப் பிரிவின் பயிற்றுவிப்பாளர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் படை கட்டளையாளர், காலாட் பயிற்சி நிலையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளையும் 8வது மற்றும் 9 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை , 112 வது காலாட் பிரிகேடின் பிரிவுத் தளபதி, கொஹுவல கஜபா படையணி ஆதரவு தலைமையகத்தின் அதிகாரி கட்டளை, 8 வது கஜபா படையணியின் இராண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் 12 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி போன்ற நியமனங்களையும் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
மேலும், அவர் 14 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப் பணிநிலை, 523 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, 212 வது காலாட் பிரிகேட் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் பயிற்சி மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவத் தலைமையகத்தின் நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர், 55 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளதுடன் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது போர்க்களத்தில் துணிச்சலைப் பாராட்டி ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது இராணுவ வாழ்க்கையில் வாகன போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, சீனக்குடா இலங்கை விமானப்படை கல்வியற் கல்லூரியில் கனிஷ்ட கட்டளையாளர் பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் தந்திரோபாய பாடநெறி, பங்களாதேஷில் ஆயுதக் குறைப்பு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை பயின்றுள்ளார்.