15th January 2025 15:46:19 Hours
புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு பேராயர் அதிவண. கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியான அவரது துணைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இந்த விஜயத்தை மேற்கொண்டார். இராணுவத் தலைமையகத்தில் தளபதி கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த விஜயம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
சவாலான காலங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவத் தளபதியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அவர் பாராட்டியதுடன், அவரது புதிய பணிக்காகவும் தளபதிக்கு பாராட்டு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி இராணுவத்தின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டங்களை பகிர்ந்து கொண்டார். இராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
விஜயத்தின் நிறைவாக விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.