Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2025 12:35:06 Hours

இராணுவத் தளபதி ஆசிர்வாத்ததிற்காக அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம்

நீண்டகால சம்பிரதாயத்திற்கு இணங்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் 2025 ஜனவரி 14 ஆம் திகதி அஸ்கிரிய பீடத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது, அஸ்கிரிய பிரிவின் சியாமா மகா நிக்காயவின் வண. மகாநாயக்க தேரர்களான அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் மதிப்புமிக்க பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

சுமுகமான இச்சந்திப்பில், அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், இராணுவத் தளபதிக்கு ஆசீர்வாதங்களை வேண்டிக் கொண்டதுடன், நாட்டின் இராணுவத்தை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் வழிநடத்த அவருக்கு வலிமையும் ஞானமும் கிடைக்க வாழ்த்தினார். பின்னர், இராணுவத் தளபதி மகாநாயக்க தேரரின் ஆசீர்வாதங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்காக அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களை மேலும் கலந்துரையாடவும், ஆசீர்வாதங்களைப் பெறவும் அஸ்கிரிய பீடத்தின் துணைச் செயலாளர் வண. நரம்பனவே ஆனந்த தேரரை சந்தித்தார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.