14th January 2025 17:58:39 Hours
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கொழும்பு 06, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்ற சிறப்பு தைப்பொங்கல் பூஜையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்தின ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வரவேற்றார்.
கோவில் மணிகள் எதிரொலிக்கத் தொடங்கியபோது, இராணுவத் தளபதி குருக்களிடம் பழ அர்ச்சனை தட்டு வழங்கினார். பின்னர் சிவஸ்ரீ ராகவன் குருக்கள் தலைமையிலான இந்து குருக்கள் குழு பூஜை நடாத்தினர். பின்னர், இராணுவத் தளபதி வளாகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பொங்கல் தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இலங்கை இராணுவ இந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தைப் பொங்கல் பூஜை, இந்த சிறப்பு நாளை அடையாளமாக நினைவுகூறுகின்றது. இந்த நிகழ்வு கோவிலின் கருவறையில் மத சடங்குகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
பொங்கல் என்பது உலகத்திலுள்ள அனைத்து இந்து சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருநாளாகும். இது இயற்கை அன்னை சூரியன் மற்றும் ஏராளமான அறுவடைக்கு பங்களிக்கும் பல்வேறு பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், தை எனப்படும் தமிழ் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது ஒரு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வு பாரம்பரிய தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இராணுவ இந்து சங்க உறுப்பினர்கள் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.