13th January 2025 14:37:59 Hours
இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக 2025 ஜனவரி 11 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை இலங்கை கவச வாகனப் படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் மரக்கன்று நட்டியதுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
படையினருக்கு ஆற்றிய உரையில், அனைத்துப் படையினரின் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்த தளபதி, படையினரின் அடிப்படைத் தேவைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறை திறன்களை அந்தந்தப் பணிகளில் பூர்த்தி செய்வதன் மூலம் படையினருக்கு வசதியான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.