12th January 2025 21:08:48 Hours
இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா 2025 ஜனவரி 12 ஆம் திகதி பமுனுகம புனித ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்றது.
பமுனுகம புனித ஜோசப் தேவாலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களும் கலந்து கொண்டார்.
புனித பாடல் மற்றும் முறையான பாராட்டுகளுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினரை இலங்கை திருச்சபையின் செயலாளர் துணை ஆயர் ஜே.டி. அந்தோணி மற்றும் ஏனைய சிறப்புமிக்க மதகுருமார்கள் அன்புடன் வரவேற்றனர். ஆயர் வண. திருசபை பாதிரியார் அருட் தந்தை அமில கோமஸ் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
புனித திருப்பலியை இராணுவத் தளபதியின் சகோதரர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிகோ மற்றும் பிற பாதிரியார்களுடன் இணைந்து நடத்தி, இராணுவத் தளபதியை ஆசீர்வதித்தார்.
பின்னர் இராணுவத் தளபதி தனது உரையில், தனது சொந்த ஊரில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றியைத் தெரிவித்தார். அவர் கிராமத்தில் தனது பிள்ளைப் பருவத்தைநினைவு கூர்ந்ததுடன், தனது குடும்பம், பமுனுகம கோன்சால்வேஸ் கல்லூரி மற்றும் தேவாலயம் தனது மதிப்புகள் மற்றும் சாதனைகளை வடிவமைப்பதில் வகித்த பங்கை எடுத்துரைத்தார். நாட்டின் அமைதிக்காய் இறுதி தியாகம் செய்த வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியதுடன், தூய இலங்கை திட்டத்தை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேஜர் ஜெனரல் பிரேமசிறி விக்ரமசிங்க (ஓய்வு) அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
நடைபெற்ற பெருமை மற்றும் பாராட்டு நிகழ்வில் மதகுருமார்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் சிரேஸ்ட அதிகாரிகள், பமுனுகம கோன்சால்வேஸ் கல்லூரியின் அதிபர் திருமதி சமிதா டி சில்வா, அரச அதிகாரிகள், கோன்சால்வேஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.