13th January 2025 14:38:30 Hours
இலங்கை இராணுவம், அதன் அனர்த்த நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 11 அன்று அலுத்திவுல்வெவ குளத்தில் ஏற்பட்ட நீர் கசிவை வெற்றிகரமாக சரி செய்தது. அதிக மழை காரணமாக கசிவு ஏற்பட்டு அணையை உடைக்கும் அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்தியது. இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு நாட்கள் இடைவிடாத முயற்சியினால், பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்து, அந்தப் பிரதேசத்தை பேரழிவிலிருந்து பாதுகாத்தது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், மற்றும் 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.எம்.பீ பாலசூரிய ஆர்எஸ்பீ ஆகியோரின் தலைமையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் தேடல் மற்றும் மீட்புக் குழு, 5 வது (தொ) கஜபா படையணி படையினர், 21 வது காலாட் படைப்பிரிவின் அதிரடி செயற்பாட்டுக் குழு, மற்றும் 212 வது காலாட் பிரிகேடின் கலகக் கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பில் இத்திட்டம் சாத்தியமானது.
கலென்பிந்துனுவெவ பிரதேச நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து 120 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அயராது பாடுபட்டு, மணல் மூட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளை பயன்படுத்தி அணையைப் பாதுகாத்து, சேதத்தைத் தடுத்தனர்.
விரைவான மற்றும் திறமையான செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட 170 க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், அப்பிரதேசத்தின் இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்கவும் முடிந்தது. இந்த நடவடிக்கை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சமூக நலனில் இலங்கை இராணுவத்தின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.