Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2025 16:00:16 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பதில் தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையணிக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பதில் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

தனது விஜயத்தின் போது, சிரேஷ்ட அதிகாரி, வீரமரணம் அடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில், பீடப்ளியூவீ பதக்கம் வென்ற கெப்டன் சாலிய அலதெனியவின் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பதில் தளபதியாக தனது பங்களிப்பின் கீழ் விடயங்கள் தொடர்பில் அவர் உரையாற்றினார்.

படையினருக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 'தூய இலங்கை' திட்டதை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்ததுடன் மேலும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தொண்டர் படைக்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விஜயம் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுடன் நிறைவடைந்ததுடன், அங்கு அவர் தொண்டர் படையின் முன்னேற்றத்திற்கான மதிப்புமிக்க வழிகாட்டுதலையும் முன்னோக்குகளையும் வழங்கினார்.