08th January 2025 15:18:13 Hours
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 12 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் தலைமையில் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் விஜய பராக்கிரம ஆரம்ப பாடசாலை மற்றும் திம்புலாகல களுகல பலட்டியாவ ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளின் 722 மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வை 05 ஜனவரி 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த முயற்சிக்கான நிதியுதவியை திருமதி சுரஞ்சினி மற்றும் கொழும்பு தரண அறக்கட்டளை உறுப்பினர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.