08th January 2025 15:22:09 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினாரால் வெளிசெல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு 06 ஜனவரி 2025 அன்று பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
வருகை தந்த அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது, பின்னர் அவர் குழு படம் எடுத்து கொண்டார். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.