08th January 2025 12:55:08 Hours
மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் 24வது படைத் தளபதியாக 2025 ஜனவரி 02 அன்று பனாகொட பீரங்கி படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை பீரங்கி படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் படையணி நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன்னர், நுழைவாயிலில் புதிய படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அணிவகுப்பு சதுக்கத்தில் இலங்கை பீரங்கி படையணி படையினரால் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், புதிய படைத் தளபதி நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் மங்கள விளக்கேற்றினார்.
அன்றைய நிகழ்வின் நினைவாக மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வளாகத்தில் மாங்கன்று நாட்டியதை தொடர்ந்து குழு படம் எடுத்து கொண்டார். அன்றைய நிகழ்வின் நிறைவாக அவர் 4 வது இலங்கை பீரங்கி படையணி வளாகத்தில் இடம்பெற்ற அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்தில் கலந்துகொண்டதுடன் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.
மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தற்போது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார்.