Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2025 15:50:42 Hours

இலங்கை சமிக்ஞை படையணியில் வெளிசெல்லும் படையணி படைத்தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 03 ஜனவரி 2025 அன்று நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில், வெளிசெல்லும் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டிஎஸ் லியன குணவர்தன அவர்களால் சிரேஷ்ட அதிகாரி மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையணி நினைவுத்தூபியில் உயிரிழந்த போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, அணிவகுப்பு சதுக்கத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையுடன் அவர் கௌரவிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டார். அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது அவர் படையினருடன் கலந்துரையாடியதுடன் அதைத் தொடர்ந்து சிப்பாய்கள் உணவகத்தில் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவிருந்திலும் கலந்துக் கொண்டார். பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றினார்.

பின்னர், படைத் தளபதி அலுவலகத்தில் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். மாலையில், இலங்கை சமிக்ஞைப் படையணி அதிகாரிகள் உணவகத்தில் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை விருந்து வழங்கப்படுவதற்கு முன்னதாக பாதையோர பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.