08th January 2025 12:45:08 Hours
பருத்தித்துறை பாவற்கரை ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக 4வது இலங்கை சிங்கப் படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளிக்கு 06 ஜனவரி 2025 அன்று கையளித்தார்.
மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் “வன்னி எய்ட் கனடா” அமைப்பின் ஊடாக அமெரிக்காவைச் சேர்ந்த திரு.ஜூனேஷ் மற்றும் சாமி சின்னையா ஆகியோரால் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தளபதி 52 வது காலாட் படைப்பிரிவிற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, தளபதிக்கு படைபிரிவின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது. பின்னர், தளபதி அவர்கள் குழு படம் எடுத்துகொண்டதுடன் படையினருக்கு உரையாற்றினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.