07th January 2025 13:00:32 Hours
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை படைப்பிரிவின் தளபதி மரியாதையுடன் வரவேற்றார், அதன் பின்னர் படைப்பிரிவின் கடமைகள் படைப்பிரிவின் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விளக்கத்தைப் பெற்றார். பின்னர், குழு படம் எடுத்துகொண்ட அவர் படையினருக்கு உரையாற்றினார்.
இந்த விஜயத்தின் போது, சிமிக் பூங்கா வளாகத்தில் புதிய கணினி ஆய்வகத்தை திறந்து வைத்த சிரேஷ்ட அதிகாரி அதன் முதல் கணினி பாடத்தினை ஆரம்பித்து வைத்தார். படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான காற்பந்து போட்டி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.