03rd January 2025 17:01:24 Hours
லெப்டினன் கேணல் டிஎம்சீஎல் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 01 அன்று சுருக்கமான நிகழ்வின் போது எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
புதிய தளபதியை தலைமை பயிற்றுவிப்பாளர் மரியாதையுடன் வரவேற்றதுடன், இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் மத வழிபாடுகளுக்கு மத்தியில் கடமையை ஏற்றுக்கொண்ட அவர் முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். பின்னர் படையினருக்கு உரையாற்றினார்.
அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரம் மற்றும் மதிய உணவுடன் நிகழ்வு நிறைவுற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.