01st January 2025 15:25:52 Hours
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 30 டிசம்பர் 2024 அன்று 511 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை, 511 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் தளபதிக்கு விரிவான விளக்கங்கள் பணியாளர்களால் வழங்கப்பட்டன. பின்னர், தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.