03rd January 2025 16:37:56 Hours
வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
சரியான நேரத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் வீதி விரைவாக புனரமைக்கப்பட்டதுடன், இப் பிரதேச மக்களின் நிவாரணம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியானது.