Header

Sri Lanka Army

Defender of the Nation

01st January 2025 14:56:16 Hours

ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானிக்கு இலங்கை இராணுவத்தினால் பிரியாவிடை

ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்களுக்கு இலங்கை இராணுவம் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதைக்குரிய எதிரொலிகளுக்கு மத்தியில் பிரியாவிடை வழங்கியது.

இந்த புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு வழங்கப்படும் ஓய்வு நிகழ்வானது அவரது உயர்வான அந்தஸ்த்தை குறிக்கின்றது. வருகை தந்த, ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். இலங்கை பீரங்கிப் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், சம்பிரதாய நிகழ்வுகளைத் ஆரம்பமாகின.

சம்பிரதாய நிகழ்வுகளை தொடர்ந்து குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் கூடியிருந்த படையினருக்கு உரையாற்றிய, அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவர்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பரஸ்பர மரியாதை மற்றும் தோழமையின் அடையாளமாக, ஓய்வுபெறும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானிக்கு இராணுவத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவம் நிறைந்த பாரம்பரியத்தை விட்டுச் சென்ற ஜெனரல் சில்வா அவர்கள் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டதுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.